Followers

Tuesday, March 13, 2012

"சீக்கிரம்டா... எனக்கு வலிக்குது...." part 3

. என் மேல் இருந்த கோபத்தை அவள் ஆக்ஸிலரேட்டர் மேல் காட்ட, ஸ்கூட்டி
பறக்க ஆரம்பித்தது. அவளை கொஞ்சம் மெதுவாக ஓட்ட சொல்லலாம் என நினைத்தேன்.
ஆனால்நான் ஏதாவது பேசினால், நடுரோட்டிலேயே வண்டியை நிறுத்தி என்னை
அடிப்பாள் போல தோன்றியது. அதனால் அமைதியாக பின்னால் உட்கார்ந்திருந்தேன்.
ஐஸ் ஹவுசை தாண்டியதும் வண்டியை வலப்புறம் திருப்பி ஓரமாக நிறுத்தினாள்.
நான் இறங்கிக் கொண்டதும், வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு,
எதுவும் பேசாமல் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். என்ன செய்வது என்று
புரியாமல் நான் அவளை பின்தொடர்ந்தேன். கொஞ்ச தூரம் நடந்த மீனு, கடலை
நெருங்கியதும், மணல் வெளியில்தொப்பென்று அமர்ந்தாள். முழங்கால்களை
கட்டிக் கொண்டாள். நானும் அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தேன்.மீனு கொஞ்ச
நேரம் எதுவும் பேசவில்லை. பிரம்மாண்டமான கடலையேவெறித்து பார்த்துக்
கொண்டிருந்தாள். நுரை நுரையாய் பொங்கிய அலைகளை முகத்தில் எந்த சலனமும்
இல்லாமல் பார்த்தாள். பின்பு திடீரென தன் கால்களுக்குள் முகம் புதைத்து
குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். அவளது முகுது மேலும் கீழும்
ஏறிஇறங்க, அவளது விசும்பல் ஒலி கடல் சத்தத்தை மீறி என் காதில் வந்து
விழுந்தது. இப்போது என்னால் தாங்க முடியவில்லை. என்இதயம் வலிக்க
ஆரம்பித்தது. பதறிப்போய் அவளிடம் சொன்னேன்.
"ஐயோ...!! என்ன மீனு இது..? எதுக்குஇப்போ அழுகுற..? ப்ளீஸ் மீனு... அழாத...!!"
"போடா... அழறதுயும் அழ வச்சிட்டு... இப்போ அழக்கூடாதுன்னு சொல்றியா...?"
மீனு கண்ணீர் வடியும் முகத்துடன் சொன்னாள்.
"ப்ளீஸ் மீனு... கண்ணைத் தொடச்சுக்கோ... அழாத... என்னால பாக்க முடியலை.."
"ஏண்டா இப்படி பண்ணுற..? எதுக்குஎன்னை சித்திரவதை பண்ணுற..? கொஞ்ச நாள்
முன்னால எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..?இப்போ உன்னால தெனம் தெனம்
அழுகுறேன்.. ஏண்டா இப்படி பண்ணுற..? ஏன் என்னை இப்படி உயிரோட கொல்லுற..?"
"ப்ளீஸ் மீனு... கண்ணை தொடச்சுக்கோ...?"
"ஏன் இப்படிலாம் பண்ணுறேன்னுசொல்லு..."
"நீ முதல்ல அழறதை நிப்பாட்டு.. நான் சொல்லுறேன்.. கண்ணை தொடைச்சுக்கோ..ப்ளீஸ்.."
நான் சொன்னதும் மீனு கண்களை துடைத்துக் கொண்டாள். கர்ச்சீப்பை எடுத்து
மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். நிமிர்ந்து என்னை பார்த்தாள்.
"ம்ம்... சொல்லு..."
நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன். பின்பு மெல்ல பேச ஆரம்பித்தேன்.
"நீ... நீ... என்னை லவ் பண்றது எனக்கு தெரியும் மீனு... கண்டுபுடிச்சுட்டேன்.."
"ஆமாம்.. பெரிய உலக அதிசயத்தை கண்டு பிடிச்சுட்டாரு..? அதான்
எல்லாருக்கும் தெரியுமே..? நான்உன்கிட்ட வாய் விட்டு சொன்னது இல்ல..
அவ்வளவுதான..? அதுக்கென்ன இப்போ..?"
"இது... இந்த லவ்... இது.. வேணாம் மீனு...?"
சொல்லிவிட்டு நான் மீனுவின் முகத்தை பார்த்தேன். அவள் முகத்தில் எந்த
சலனமும் இல்லை. மிக அமைதியாக இருந்தது.
"ஏன்...? என்னைய புடிக்கலையா..? என்னை விட நல்ல பொண்ணா எதிர்பாக்குறியோ..?"
"ச்சே.. ச்சே.. அதெல்லாம் இல்லை மீனு... உனக்கென்ன குறைச்சல்...?"
"அப்புறம் என்ன...?"
"நான்தான் உனக்கு பொருத்தமா இருக்க மாட்டேன் மீனு.. நீ வேற யாராவது
உனக்கு பொருத்தமா ஒருத்தனை .."
"நீ எனக்கு பொருத்தமா இல்லைன்னு யார் சொன்னா..?"
"ஏன்..? நான்தான் சொல்லுறேன்.."
"ஏன் அப்படி சொல்லுற..?"
"என்ன மீனு நீ..? நீ எவ்வளவு அழகாஇருக்குற..? எவ்வளவு படிச்சிருக்க..? கை
நிறைய சம்பாதிக்கிற..? நல்ல வசதியான வீட்டுப் பொண்ணு.. உனக்கேத்த மாதிரி
யாரையாவது.... நீ என்னடான்னா என்னைப் போய் லவ் பண்ணிக்கிட்டு..." நான்
படபடவென சொன்னேன்.மீனு கொஞ்ச நேரம் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள்.
பின்பு தன் வலது கையை எடுத்து என் கன்னத்தில் வைத்தாள். என் முகத்தை அவள்
பக்கமாக திருப்பி காதலுடன் பார்த்தாள்.
"உனக்கு என்னடா குறைச்சல்..? இந்த உலகத்திலேயே நீதான் என் கண்ணுக்கு அழகா
தெரியுற.. படிப்பு என்ன பெரிய படிப்பு..? கவுரமான வேலைல இருக்குற..
கைநெறைய சம்பாதிக்காட்டாலும் ஒரு குடும்பத்தை நடத்துற அளவு
சம்பாதிக்கிற.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. எந்த பொண்ணையும்
ஏறெடுத்து பாக்க மாட்ட.. ஒரு ஆம்பளைக்கு இதை விட என்ன வேணும்..?"
மீனு இந்த உலகத்திலேயே நான்தான் சிறந்த ஆண் என்பது மாதிரி பேச, நான்
சற்று திணறிப் போனேன். அவளது கையை என் கன்னத்தில் இருந்து எடுத்து, என்
முகத்தை விலக்கிக் கொண்டேன். தலையை குனிந்தபடி சொன்னேன்.
"அதெல்லாம் சரியா வராது மீனு.. வேணாம் ப்ளீஸ்..."
"லவ் பண்ணாம… வாழ்ந்து பாக்காம... அது சரியா வராதுன்னு, நீயா எப்படி சொல்லுற..?"
"சொன்னா கேளு மீனு..."
"இப்போ என்ன பிரச்னை உனக்கு..?" என மீனு திடீரென கேட்டாள்.
"பிரச்னையா...? எனக்கு என்ன பிரச்னை..? எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை.."
"உனக்குத்தான் பிரச்னை.. உன் பிரச்னை என்னனு சொல்லு.. நான் உன்னைவிட
அதிகமா சமபாதிக்கிறதுதான் பிரச்னையா..? நாளைக்கே நான் வேலையை ரிசைன்
பண்ணிறவா...?"
மீனு அப்படி கேட்டதும் நான் திகைத்துப் போனேன்.
"ச்சே.. ச்சே... அதெல்லாம் வேணாம் மீனு..."
"பின்ன..? நான் பணக்கார வீட்டுப்பொண்ணா இருக்குறதுதான் உன் பிரச்னையா..?
எல்லாத்தயும் விட்டுட்டு நாளைக்கே உன்கூட வந்துடவா..?"
"ஐயையோ... என்ன மீனு பேசுற நீ...? எனக்காக எதுக்கு நீ எல்லாத்தையும் விட்டுட்டு..."
"சொல்லுடா... நான் என்ன பண்ணனும்..? என்ன பண்ணுனா நீ என்னை லவ் பண்ணுவ..?"
மீனுவின் குரல் இப்போது தழுதழுக்க ஆரம்பித்தது. அவள் கண்களில் கண்ணீர்
துளி ஒன்று திரண்டு, வழிந்து ஓட ரெடியாக இருந்தது. என் மனதுக்குள் அவள்
மீதான காதல் பொங்கி பெருக ஆரம்பித்தது. என்ன பெண் இவள்..? என்னிடம் என்ன
இருக்கிறது என்று என்னை இப்படி காதலிக்கிறாள்..? எனக்காக எல்லாவற்றையும்
விட்டு விட தயாராயிருக்கிறாளே..? எனக்காக இப்படி ஏங்கும் இவளுக்கு நான்
என்ன செய்திருக்கிறேன்..? இவளை கண்ணீர் சிந்த வைத்ததை விட..? நினைக்க,
நினைக்க எனக்கும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
"வே....வேணாம் மீனு.." நான் பலவீனமாக தலையாட்டி மறுத்தேன்.
அவள் அவ்வளவு சொல்லியும் நான் அவளது காதலை மறுக்க, மீனு துடித்துப் போனாள்.

No comments:

Post a Comment

POP