அன்று நான் கம்பனிக்கு புறப்பட்டு செல்ல, அவளை நான் வெளியில்
எதிர்பார்த்தேன், ஆனாள் அவள் என் கண்களுக்கு அகப்படவில்லை. அன்று எனக்கு
வேலையே அவ்வளவாய் ஓடவில்லை, நான் சாயந்திரம் வீட்டுக்கு சற்று
நேரத்திலையே போனேன். அப்போ அவள் அவள் போர்ஷன் வாசலில் அமர்ந்து பூக்களை
கோர்த்து கொண்டு இருந்தாள். ஒரு இரண்டு செகண்ட்தான் எங்கள் கண்கள்
ஒன்றோடு ஒன்று மோதியது, ஆனால் பல விஷயங்களை பரிமாரினது போல உணர்ந்தேன்.
நான் கதவை திறந்து உள்ளே போக, எனக்கு ஒரு ஆச்சிரியம் காத்திருந்தது. ஏங்க
ரெண்டு பேரு போர்ஷன் ஜென்னல் சற்று திறந்து இருந்தது. அந்த ஜென்னல்
ஒன்றரை அடி அகலத்துக்கு மூன்று அடி உயரம் இருக்கும், நடுவில் எந்த
கம்பியோ, கிரில்லோ கிடையாது. அந்த காலத்தில் நன்றாக காத்தொட்டத்துக்கு
வைத்திருக்கும் முறை. நான் மெல்ல கட்டிலில் உட்கார்ந்தவாரே மெல்ல எட்டி
பார்க்க, அங்கே இருட்டாக இருந்தது.
வெளி வெளிச்சத்துக்கும் உள் வெளிச்சத்துக்கும் என் கண்கள் சரியாக இரண்டு
நிமிடம் பிடித்தது. அங்கே எல்லாம் மங்கலாய் தெரிய, அவளின்
ஹம்மிங்தொடங்கியது. அந்த பாட்டின் ஆண் குரல் வரும் இடத்தில் அவள்
நிறுத்த, நான் அதில் இருந்து தொடங்க, சற்று இருவரும் எங்கள் மொழியில்
பேசி கொண்டோம். அப்புறம் அவள் ஜென்னல் பக்கத்தில் வந்து, "காப்பி
சாபிடரீங்களா?" என்று மெதுவாக கேட்க, நான் அவளை பார்த்து புன்னகைத்தவாரே
தலையை சரி என்று ஆட்டினேன். எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது
வீட்டுக்குவந்தவுடன் காப்பி அருந்துவது. ஒரு ஐந்து நிமிடங்களில் ஜென்னல்
வழியாக ஒரு கிளாசை நீட்ட, நான் வாங்க ,"ஸ்ஸ்ஸ்…சுட போகுது பாத்து " என்று
அவள் சொல்ல, நான் பத்திரமாக அந்த கிளாசை வாங்கிக்கொள்ள, அது ஒரு
அற்புதமான நிகழ்வாக இருந்தது.
நான் காபியை மெல்ல ஊதி அருந்த, காப்பி அவள் கையால் கிடைத்தாலோ என்னவோ
சூப்பராக இருந்தது. "மஞ்சு.. காப்பி சூப்பர்" என்றேன். அவள்
குழப்பத்துடன், "என் பேர் எப்படி தெரியும்?" என்று கேட்க, "மனசுக்கு
பிடித்தஒருத்தரை பற்றி தெரிந்து கொள்வது பெரிய விஷயமா?" என்றேன். "யார்
உங்களுக்கு மனசுக்கு பிடிச்சவங்க?" என்று அவளும் கேட்க, "நான் யார் பெயரை
சொன்னேனோ அவங்கதான். அவங்களை உங்களுக்கு தெரியுமா?" என்று நானும்
கிண்டலடிக்க, அவள் கேக்கபுக்கே என்று அழகாக சிரித்தாள். "சரி யாராவது
வந்துற போறாங்க, ஜெனல்லை கொஞ்சம் அடைச்சுகரேன்" என்றாள். "யார் வர போறா,
திறந்தேஇருக்கட்டும்" என்று நான் சொல்ல, "ம்ம்..சொன்ன கேளுங்க", என்று
சொல்ல நான் குடித்து முடித்த காப்பி கிளாசை நீட்ட, அவள் என் விரல்கள் பட
வாங்கி கொண்டு ஜென்னலை அடைத்தால். ஆனால் பூட்ட வில்லை என்பது தெரிந்தது.
அவள் மீண்டும் ஜென்னலை திறப்பால் என்று நான் காத்து கிடக்க, ஒரு அரை மணி
நேரத்துக்கு பிறகு அவசரமாக அந்த ஜென்னல் பூட்ட படும் சத்தம் கேட்டது, அதே
நேரத்தில், "என்னம்மா, சாப்டியா, தனியா போர் அடிச்சிருச்சா" என்று அவள்
அப்பாவின் குரல் கேட்டது. கொஞ்ச நேரத்தில், அடுப்படி சத்தம் கேட்டது,
பிறகு, மீண்டும் அவள் அப்பாவின் குரல்,"மஞ்சு கண்ணு , நான் கொஞ்சம்
வெளியே போயிட்டு வரேம்மா, ஒரு முக்கியமான வேலை, கொஞ்சம் நேரம்ஆகும், நீ
சாபிட்டு படுத்துக்கோ, நான் வந்து உன்னே எழுபரே. சாரிமா உன்னே தனியா
விட்டுட்டு போறே, முடிஞ்சா அளவுக்கு சீக்கிரமா வந்தரேமா" என்றார்.
"சரிப்பா, சீக்கிரம் வந்துருங்க, நான் சாப்பிட்டு படுக்கரே, வந்து
எழுப்புங்க" என்று சொல்ல, நான் வாசல் ஜனல்லை திறந்து வைத்து பார்க்க,
அவளோட அப்பா தன் மொப்பட்டை ஸ்டார்ட் செய்து புறப்பட்டார். அடுத்த இரண்டு
நிமிடத்தில் உள் ஜென்னல் திறந்து.
(தொடரும்…)
S
No comments:
Post a Comment